500 நூறு வருடங்களுக்கு முன்னர் கண்டி மாநகரை ஆட்சி செய்த அரசன் ராஜ சிங்க அவர்களின் பாதுகாப்புக்காக முன் கூட்டியே எழுதப்பட்ட அவரது எதிர் காலம்.
உங்களது வாழ்க்கை சுபிட்சமாக அமையும். எதிலும் நீங்கள் வல்லமை படைத்தவர். உங்களது பாதகாவலர்களை அடிக்கடி மாற்றம் செய்யுங்கள். அதற்காக சில புத்த பெருமானின் தேவாலயத்தில் பூஜைகள் நடத்த வேண்டும். சூரிய உதயம் அதிகாலை நேரத்தில் கிழக்கு திசையை நோக்கி எழுந்து கொள்ள வேண்டும். வெள்ளை தாமரைப்பூ தட்டில் மஞ்சள் குங்குமம் இட்டு புத்த பெருமானை வழி படுதல் வேண்டும். இதை தொடர்ந்து பத்து நாட்கள் கடைபிடிக்க வேண்டும். இந்த நிலையில் மாமிசங்கள் உண்ணாமல் இருக்க வேண்டும்.
பத்தாவது நாள் வட மேற்கு திசையை நோக்கி சூரியன் மறையும் மாலை வேளையில் சிவப்பு தாமரைக்கனி நிறைந்த தடாகத்தில் நீராடல் வேண்டும் . வெள்ளி கிண்ணத்தில் அந்த நீரை கிழக்கு திசைய நோக்கி அருந்துதல் வேண்டும். உங்களது அனைத்து தீய காரியங்கள் நீக்கப்படும்.