thangapandi n..
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் யஸ்வந்த் சின்ஹாவின், "இலங்கையில் ராஜபக்ச அரசு தொடர்ந்து தமிழர்கள் மீது அடக்கு முறையை கையாண்டால், தனி ஈழம் அமைவது வெகுதொலைவில் இல்லை என்பதை ராஜபக்சவுக்கு கூறிகொள்ள விரும்புகிறேன்" என்ற கருத்து ஒரு நெற்றியடி.
உண்மையில் தமிழக கட்சிகளும், தமிழக தலைவர்களும் இப்படி சொல்வது என்பது வேறு. ஆனால் இத்தகைய துணிச்சலான கருத்தை இலங்கை அரசுக்கும், இந்திய காங்கிரஸ் அரசுக்கும், ஒரு வட இந்திய முன்னணி தலைவர் சொல்வது என்பது வேறு.
இப்போது யஸ்வந்த் சின்ஹா சொல்லி யதார்த்தத்தை புரிய வைத்துள்ளார். அதனால்தான் இது பலருக்கு நெற்றியடி என்கிறேன்.
பலருக்கு நாகரீக சொல்லால் அடித்தால் புரியாது. இப்படி நெற்றியடியாகவும், அப்புறம் கல்லாலும் அடித்தால்தான் புரியும். இப்போது சொல்லடி தாண்டி, தமிழகத்தில் நெற்றியடி வந்துள்ளது. இதுவும் விளங்காவிட்டால் அப்புறம் கல்லடிதான்.
இதற்கு வழி ஏற்படுத்திய தமிழக மாணவர் கூட்டமைப்பு மற்றும் அதன் மாணவ தலைவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள் : : மனோ கணேசன்