இரோசிமா / அனுகுண்டு - புகுசிமா / அனுவுலை
புக்குக்கோ / இயற்கை விவசாயம் / நம்மாழ்வார் / சே குவேரா
--------------------------------------------------------------------
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஒரு ஜப்பானிய தம்பதியர் கைகுழந்தையுடன் விமான நிலையத்துக்கு போக விசாரித்து கொண்டு இருந்தார்கள். தாம்பரம் போகும் வழி என்பதால் நான் உதவுவதாக சொல்லி பேச்சு கொடுத்தேன்.
ஜப்பானில் இரோசிமாவில் இருந்து வருவதாக சொன்னவரிடம், எங்கள் நாட்டில் உங்கள் பயணம் எப்படி இருந்தது என்று பரச்பரம் உரையாடிய பின்பு, அவர்களிடம் ஜப்பானை பற்றி எனக்கு தெரிந்த ஒவ்வொன்றையும் சொல்ல ஆரமித்தேன். இரோசிமா - நாகசாகி, (little boy, fat man ) சாமுராய் -அகிரா குருசேவா, என்றவுடன் எங்கள் நாட்டின் சிறந்த திரைபட இயக்குனர் என்றவிடம் சுனாமி - புக்குசிமா - அனுவுலை என்றவுடன் எங்கள் நாட்டை பற்றி நிறைய தெரிந்துவைத்துள்ளதாக பாராட்டினார்கள்.
மேலும் அவர்களிடம் மாசன்போ புக்குக்கோ என்றேன் புரியாதவர் போல் என்னை பார்த்தவரிடம் இயற்கை விவசாயம் (organic farming ) என்று சொன்னவுடன் இருவர் முகத்திலும் பெரும் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். புக்குக்கோவை எப்படி தெரியும் ? நாங்களும் சிறியளவு விவசாயம் செய்ரோம் என்று சொன்னவரிடத்து இந்தியாவின் புகுக்கோ ஐயா நம்மாழ்வாரை அறிமுகப்படுத்தினேன்.
அன்பின் வெளிப்பாடாக என்னிடம் இருந்த சே படம் பொரித்த வில்லை ( badge ) கொடுத்தேன். உடனடியாக தங்கள் குழந்தையின் சட்டையில் குத்திவிட்டார்கள். சே எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்றார், அப்போது நாம் இருவரும் காம்ரேட் என்றேன், அதை அமோதித்தவாரு சிரித்தார். திரிசூலம் ரயில் நிலையம் வந்தது பிரியாவிடை அளித்தோம் மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன்.