நமது வீர விளையாட்டான ஜல்லிகட்டுக்கு பல சோதனைகள் ! இதன் உண்மைதன்மை அறியாத பிற மக்களுக்கு இதனை பற்றி பல தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர் பலர். மிருகங்களின் காப்பாளர்களாக தங்களை காட்டிக்கொள்ள நினைக்கும் பலர் பல்வேறு போய் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.
பசுக்களை தெய்வமாக போற்றும் நாம் அவற்றை துன்புருதுவோமா?
ஜல்லிக்கட்டின் உண்மைகளை விளக்கவும், நமது பாரம்பரியத்தை காக்கவும், உலகம்மெங்கும் பரவி இருக்கும் நம் தமிழ் சமுதாயத்துக்கு நம் மண்ணில் நடக்கும் விளையாட்டுக்களைப்பற்றி எடுத்துரைக்க்கவும்மே ஜல்லிக்கட்டு (Jallikattu.in) துவங்கப்பட்டுள்ளது.
மேலும், ஜல்லிக்கட்டு மட்டுமின்றி நமது பாரம்பரிய விளையாட்டுக்களான சேவல் கட்டு, ரேக்ளா ஓட்டம் மற்றும் பலவற்றைபற்றியும் இந்த வலைதலத்தின்மூலம் எடுத்துக்கூற உள்ளோம்.
இந்த வலைதளத்தை துவங்கியுள்ளவர் கோவையை சேர்ந்த திரு. சோ. பாலகுமார். கணிப்பொறித்துறையில் பல ஆண்டுகள் அனுபவமிக்கவர். வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு தாய்மன்னுக்கு திரும்பி இங்கு தொழில் செய்து வருகிறார்.