தேவ்யானி...
வீட்டுப்பணிப் பெண்ணுக்கு விசா வாங்கிய வழக்கில் மோசடி காரணமாக அமெரிக்க காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய துணை தூதுவர்.
இதுதான் தற்போது இந்தியாவின் முக்கியசெய்தி.
இதன் எதிரொலியாக இந்திய அரசு அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு அளித்து வந்த சலுகைகளை முடக்கியுள்ளது. அவர்கள் வீட்டில் வேலை பார்போரின் விபரங்களையும் சேகரித்துள்ளது.
சல்மான் குர்ஷித்தோ தேவ்யானிக்காக அமெரிக்க வெளியுறவு அதிகாரிகளுடன் மணி கணக்கில் பேசி வருகிறார். தேவ்யானியின் தந்தையோ அமெரிக்க சொல்லும் குற்றத்தை செய்தது வேறொரு அதிகாரி என்கிறார்.
இந்திய முழுவதும் தேவ்யானிக்கு ஆதரவு பெருகி வருகிறது. மத்திய அரசோ இதற்கு ஒரு படி மேலே சென்று தேவ்யானிக்கு ஐ.நா விற்கான நிரந்தர தூதுவர் என்று பதவி உயர்வு அளித்துள்ளது.
சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை, திருமாவளவன் கண்டன அறிக்கை என்று தேவ்யானிக்கு ஆதரவு பட்டியல் நீள்கிறது. ஆனால் ஒருவர் கூட தேவ்யானி மீது அமெரிக்க சொல்லும் குற்றத்தை மறுத்து ஒரு அறிக்கை கூட விடவில்லை.
இந்த நடவடிக்கையில் அமெரிக்காவின் உள்நோக்கம் என்ன?
அத்து மீறி இந்திய கடல் எல்லைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த அமெரிக்க கப்பல் மற்றும் அதில் இருந்தவர்களை இந்திய அரசு விசாரணை செய்து வருவதனால் பழிக்கு பழியானதா இந்த கைது நடவடிக்கை ?
எது எப்படியோ 8 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்கியது குற்றம் என்கிறது அமெரிக்கா. அப்படியானால் யாரிடம் இருந்து இந்த புகார் பெறப்பட்டது ? அல்லது புகார் இல்லாமலேயே கைதா ? ஒன்னும் புரியல!
யார் செஞ்சாலும் தப்பு தப்பு தான்.