இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை , இலங்கை கடற்படை சிறைபிடித்து செல்வதும், தாக்குதல் நடத்துவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரத்தை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 600-க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 10-க்கும் மேற்பட்ட படகுகளை சேதப்படுத்தியதோடு , மீனவர்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனர். மேலும் மீனவர்கள் பிடித்திருந்த மீன்களையும் இலங்கை கடற்படையினர் பறித்து சென்றதாக கரைக்கு திரும்பிய மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்