தாய் தந்தைக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருந்தால், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை, சரியாகத் தூக்கமின்மை மற்றும் சிறுநீரக இயக்கம் சரியில்லாமல் இருந்தால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படலாம்.
சேர்க்கவேண்டியவை: தினமும் காலையில் முருங்கைக்கீரையும், சிறிய வெங்காயமும் சேர்த்து சூப் சாப்பிடலாம். மதிய உணவில் 5 - 10 பூண்டுப்பற்கள், 50 கிராமுக்குக் குறையாமல் சிறிய வெங்காயம் சேர்த்துக்கொள்ளலாம். வாழைத்தண்டு, வாழைப்பூ, சுரைக்காய், பீர்க்கங்காய், பார்லி ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்ப்பது அவசியம். எண்ணெய் உணவில் குறைவாக சேர்க்கலாம்.