இயற்கை உணவில் எல்லாம் இருக்கு!:
#doctorvikatan உயர் ரத்த அழுத்தம்
பொதுவாக ஒருவருக்கு 120/80 என இருக்கவேண்டிய ரத்த அழுத்தம், வயதாகும்போது கொடுக்கப்படும் அதிகபட்ச சலுகை 140/90. 140 என்பது இதயம் சுருங்கும்போது உள்ள ரத்த அழுத்தம். 90 என்பது இதயம் விரிவடையும்போது வரும் ரத்த அழுத்தம். இதயம் விரியும்போது ரத்த அழுத்தம் உயர்ந்தால் அதாவது 90-ஐ தாண்டி 100-110 என அறிவித்தால் ஆபத்து என்பதை உணரலாம். மேல் கணக்கு 140-ஐ தாண்டும் போது அதற்கான உணவும் மருந்தும் மிக அவசியம்.