விஐடியுடன் இணைந்து புனே இந்திய தானியங்கி வாகன ஆராய்ச்சி மையம் கூட்டு பிஎச்டி படிப்புக்கான ஒப்பந்தத்தை, விஐடி சார்பாக துணைத்தலைவர் ஜி.வி.சம்பத், ஏஆர்ஏஐ சார்பாக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஏ.மராத்தாவும் பரிமாறிக் கொண்டனர். உடன் விஐடி துணைவேந்தர் வி.ராஜு, இணை துணைவேந்தர் நாராயணன், இயக்குனர் செந்தில்குமார்.
இந்திய தானியங்கி வாகன ஆராய்ச்சி மையத்துடன், விஐடி பல்கலை ஒப்பந்தம்
வேலூர், அக்.5:
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்துடன் புனேவில் உள்ள இந்திய தானியங்கி வாகன ஆராய்ச்சி மையம் (ஏஆர்ஏஐ) இணைந்து பிஎச்டி பாடத்திட்டம் அறிமுகம் செய்ய முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கிடையே கையெழுத்தானது.
விஐடி சார்பில் வேந்தர் ஜி.விசுவநாதன், ஏஆர்ஏஐ சார்பாக அதன் இயக்குனர் ஸ்ரீகாந்த் மராத்தேவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில் விஐடி துணைத்தலைவர்கள் ஜி.வி.சம்பத், சேகர் விசுவநாதன், துணை வேந்தர் ராஜு, இணை துணை வேந்தர் நாராயணன், விஐடி தானியங்கி ஆராய்ச்சி மைய இயக்குனர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.