புக்கிங், "புல்': தமிழகத்தில், மின்வெட்டு பிரச்னையால், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக, பள்ளிகளில் ஜெனரேட்டர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், தொழிற்சாலைகள், திருமண மண்டபங்கள், ஓட்டல்கள் என, பல்வேறு தொழில் நிறுவனங்களால், ஜெனரேட்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதால், பள்ளிகளுக்கு கிடைக்கவில்லை.அரசுப் பள்ளிகளில் ஜெனரேட்டர்கள் வசதி, சுத்தமாகக் கிடையாது. பெரிய தனியார் பள்ளிகளில் மட்டும், ஓரளவுக்கு இந்த வசதிகள் இருந்தாலும், பள்ளி முழுவதிற்கும் மின்சாரம் வினியோகிக்கும் அளவுக்கு, சக்தி வாய்ந்த ஜெனரேட்டர்கள் இல்லை. நேற்று வரை, பல்வேறு இடங்களில் அலைந்தும், ஜெனரேட்டர்கள் கிடைக்கவில்லை என, பள்ளி நிர்வாகிகள் புலம்புகின்றனர்.